கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை களமிறங்கினார். அவரை எதிர்த்து கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் அடிப்படையில் தி.மு.க.,வேட்பாளராக கணபதி ராஜ்குமார்க்கு திமுக மேலிடம் வாய்ப்பு கொடுத்தது, அதிமுக.,வின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சிபாரிசாக சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சியின்( நாதக) கலாமணி ஆகியோர் களமிறக்கப்ட்டனர். கடுமையான போட்டி என கூறப்பட்ட நிலையில் நேற்று பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில், திமுக., வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,17,561 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இறுதிச்சுற்று வித்தியாசம்
தி.மு.க., ராஜ்குமார்5,68,200
பா.ஜ., அண்ணாமலை4,50,132
அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,36,490நா.த.க., கலாமணி 82,363
1,17,561 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
ஏற்கனவே கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவாக்குறிச்சி தொகுதியில்போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியடைந்தார். தற்போது எம்பி தேர்தலிலும் தோல்வியை தமுவினார் என்பது குறிப்பிடதக்கது..