கோவை, ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித் வீடு. காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீடு ஆகிய இரு வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு ஆயுதம் தயாரித்த வழக்கில் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். NIA அதிகாரிகள் விசாரிக்கும் இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை கோவை வந்த அதிகாரிகள் இருவர் வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய வாகன சோதனையில் இரண்டு பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனையில் இரண்டு பட்டதாரி கைது செய்தவர்களிடம் – இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் – கோவையில் இரண்டு நபர்களிடம் விசாரணை. செய்து வருகின்றனர். தேசிய புலணாய்வு முகமை சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ள காளப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வரும் இவர் நாம் தமிழர் கட்சியின் குறுதி பாசறை உறுப்பினராக இருந்து கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு விலகி ஐ.டி.நிறுவனம் ஒன்றிற்காக வீட்டிலிருந்தே பணியாற்றி வருவதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
இதேபோல் ஆலாந்துறையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அக்கட்சி மண்டல செயலாளர் விளக்கம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் சோதனையை முடித்து வெளியேறினர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.