கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றியடைந்ததை, நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர். மாலை 5.00 மணிக்கு துவங்கிய இந்த ஒளிபரப்பு கடைசி 15 நிமிடங்கள் திக்திக் அனுபவத்தை மாணவ மாணவியர்களுக்கு வழங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் 2.5 அடி உயர 10 கிலோ எடை கொண்ட ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நேரு கல்வி குழுமங்களின் செயலரும் முதன்மை கல்வி அதிகாரியுமான
முனைவர். பி. கிருஷ்ணகுமார் மற்றும் கல்வி குழுமங்களின் முதல்வர்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக் கோசங்களை முழக்கமிட்டனர்.
இது குறித்து நேரு கல்வி குழுமங்களின் செயலரும் முதன்மை கல்வி அதிகாரியுமான முனைவர். பி. கிருஷ்ணகுமார், கூறுகையில் :- இன்று சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நாமும், நமது இந்திய நாடும் நாட்டு மக்களும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜுலை 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் சந்திராயன் 3.
இந்த வெற்றியால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. மேலும் நிலவின் தென்துருவதில் தரையிரங்கும் முதல் விண்கலம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம், 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றியடைந்ததை, நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர். மாலை 5.00 மணிக்கு துவங்கிய இந்த ஒளிபரப்பு கடைசி 15 நிமிடங்கள் திக்திக் அனுபவத்தை மாணவ மாணவியர்களுக்கு வழங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் 2.5 அடி உயர 10 கிலோ எடை கொண்ட ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நேரு கல்வி குழுமங்களின் செயலரும் முதன்மை கல்வி அதிகாரியுமான முனைவர். பி. கிருஷ்ணகுமார் மற்றும் கல்வி குழுமங்களின் முதல்வர்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக் கோசங்களை முழக்கமிட்டனர்.