ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு சட்டமன்ற அவையில் நடந்து கொண்ட முறையை கண்டித்து, ஆளுநர் சட்டமன்ற ஜனநாயக மரபை மீறியதாக கூறி, அவரின் செயலை கண்டித்து, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி. ஆர். நடராஜன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி. சிவசாமி மாவட்ட துணை செயலாளர் ஜே.ஜேம்ஸ், மௌ.குணசேகர், சி. தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், யு.கே. சிவஞானம், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கருப்புசாமி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகம் சேதுபதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஷாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கே. எம். செல்வராஜ், எஸ். ராதாகிருஷ்ணன், வெ. வசந்தகுமார், கே. ரவீந்திரன், என். சந்திரன், வி.ஆர். பாண்டியன், ஏ.சி. செல்வராஜ், பேரறிவாளன், ஆதித்தமிழர் பேரவை கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.