கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்றனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்த பெற்றது மாசாணி அம்மன் கோவில் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிரபல கோயில்களுக்கு அறங்காவலர் குழுவை தமிழக அரசு நியமித்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக முரளிகிருஷ்ணா பதவி ஏற்றுகொண்டர். தமிழக அரசு அனுமதி பெற்று விரைவில் ஆனைமலையில் மாசாணி அம்மன் கலைக் கல்லூரி கட்டப்படும்,வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் பக்தர்களின் பெண் குழந்தைகளுக்கு கருணை இல்லம் துவங்கப்பட உள்ளது. அறநிலை துறை சார்பில் குடமுழுக்கு விழாசிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.கோயிலை சுற்றி சாலைகளில் அம்மன் வலம் மரத்திலான திருத்தேர் செய்யப்படுகிறது.பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக ஆனைமலை சுப்பே கவுண்டன் புதூரில் ஊரில் ரயில்கள் வந்து செல்லஅனுமதி கேட்கப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான மருத்துவ உதவிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஓய்வறை குளியலறை, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார்,முன்னால் பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்க்குமார்,ஆனைமலை நகர பேரூராட்சித் செயலாளர் செந்தில்குமார்,மேற்க்கு ஒன்றியா செயலாளர் கன்னி முத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.