கோவை, சிவானந்த காலனி ரத்தினபுரி, சாஸ்திரி ரோடு பகுதி சேர்ந்தவர் மணி. இவர்கள் பல ஆண்டுகளாக சாஸ்திரி ரோட்டில் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் 26 ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு மணிக்குமார் சென்று விட்டார். அதன் பிறகு அவர்கள் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம சாமி உள்ளே இருந்த 15 ஆயிரம் பணம்
சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு ரூபாய் மட்டும் ஐந்து ரூபாய் நாணயங்கள் சில்லறையாக இரண்டு டப்பாக்களில் சுமார் 5 ஆயிரம் வைத்து உள்ளார். அதனை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
இதைப் பார்த்த மணிக்குமார் மகன் ஸ்ரீ ஹரி ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த சி.சி.டி.வி கட்சியில் 27 ஆம் தேதி அதிகாலை சுமார் இரண்டு மணிக்கு மேல் அப்பகுதியில் ஜெர்க்கின் அணிந்து செல்லும் ஒரு நபர், அருகே உள்ள கடைகளுக்கு சென்று பார்த்து நோட்டமிடுகிறார். பின்னர் அங்கு இருந்த உணவகத்தில் உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் விறகு கட்டையை எடுத்துக் கொண்டு மணிக்குமாரின் கடைக்கு சென்று பூட்டை உடைத்து கொள்ளை அடித்து கொண்டு பையுடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
கோவை மாநகரில் சிவானந்த காலனியின் மையப் பகுதியில் உள்ள மளிகை கடையில் சாவகாசமாக கொள்ளை அடித்துச் செல்லும் திருடனின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது