அகில இந்திய லைப் இன்சூரன்ஸ் LIAFI (LIFE INSURANCE AGENTS’ FEDERATION OF INDIA) முகவர்கள் சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 14 லட்சம் LIC முகவர்கள் மற்றும் கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டி, LIC நிர்வாகம், IRDAI நிர்வாகம், மத்திய அரசு ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்ட ஆயுள் காப்பீடு முகவர்கள் சங்கத்தினர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலிசிதாரர்களின் போனஸை உயர்த்துதல், பாலிசியின் மீதான கடன் வட்டியை குறைத்தல், பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்குதல், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்குதல், அனைத்து முகவர்களுக்கும் விபத்து காப்பீடு 10 லட்சமாக வழங்கிடுதல், முகவர் சட்டம் 2017-ல் முகவர்களை பாதிக்கும் சரத்துக்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டமானது நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், கோவை கோட்ட ஆயுள் காப்பீடு முகவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.