தமிழ்நாடு கேட்ரிங் சங்கம் சார்பில் கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதி கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவுத் திருவிழா & கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்வு மற்றும் டிக்கெட் வெளியீட்டு நிகழ்வு நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பிரியாணி வகைகள், பழரசங்கள், 90s மிட்டாய்கள்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இன்றைய தினம் நடைபெற்ற டிக்கெட் வெளியீட்டு விழாவில்ல் சிறப்பு விருந்தினர்களாக தி மேட் செஃப் கவுஷிக்,தமிழ்நாடு கேட்ரிங் சங்கத் தலைவர் மாதம்பட்டி நாகராஜ்,அரோமா நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமி, குக்வித் கோமாளி நட்சத்திரங்களான புகழ், கேமி, தங்கதுறை ஆகியோர் கலந்து கொண்டு டிக்கெட்களை வெளியிட்டனர்.கொடிசியாவில் நடைபெற உள்ள உணவு விழாவில், பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 799, குழந்தைகளுக்கு ரூபாய் 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் எனவும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் மை ஷோ மூலமாக மட்டுமே பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.