கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா கோயமுத்தூர் கராத்தே சங்க தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் சினோத் முன்னிலை வகித்தார்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆனந்த்,
இந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக செயலாளர் பிரியா,ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில் கவுரவ அழைப்பாளர்களாக சங்கத்தின் இயக்குனர்கள் நீல் மோசஸ், டாக்டர் பி.ஏ. தேவராஜ், பால் விக்ரமன்,கல்லூரி முதல்வர் டாக்டர். ஏ. பொன்னுசாமி உடற்கல்வி இயக்குனர் டாக்டர். எஸ். கருணாநிதி,
இந்துஸ்தான் பள்ளியின் முதல்வர் , செண்பகவால் ஆகியோர் கலந்து கொண்டனர்..
கட்டா மற்றும் குமித்தே என இரு பிரிவுகளில் நடைபெற்ற,இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்..
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில் எல்.கே.ஜி.முதல்,
பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் அடுத்து மாநில அளவிலான போட்டகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..