Skip to content
Home » கோவையில் ஆகஸ்ட் 20ம் தேதி ரன் ஃபார் வீல்ஸ்’ மாரத்தான்…

கோவையில் ஆகஸ்ட் 20ம் தேதி ரன் ஃபார் வீல்ஸ்’ மாரத்தான்…

  • by Senthil

கோவையில் ஆகஸ்ட் 20 ந்தேதி சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து ‘ரன் ஃபார் வீல்ஸ்’ மாரத்தான்… 4 வது பதிப்பாக நடைபெறும் இதில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர்…

கோவையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்த உள்ள இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய அரங்கில் நடைபெற்றது.இதில் கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜசேகர்,மற்றும் சிற்றுளி அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் ஆகியோர் பேசினர். ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் கோவையில் ரன் ஃபார் வீல் மாரத்தான் நிகழ்வை நடத்துவதாகவும்,இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி சாதாரண பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்..இதில் சிறப்பு விருந்தினர்களாக,கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாகவும், மேலும் . இந்த ஆண்டு புனேவில் நடைபெற்ற தேசிய பாராலிம்பிக் தடகளப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற தமிழக பாரா தடகள வீரர்களை கவுரவிக்க உள்ளதாக தெரிவித்தனர்..
மேலும், இந்த மாரத்தான் போட்டியின் முடிவில் தமிழ்நாடு சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியின் முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் ஆற்றல்மிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளதாக கூறினர்.. .இந்த சந்திப்பின் போது சிற்றுளி அறக்கட்டளை நிர்வாகிகள் அரசு,ப்ரீத்தி,பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!