Skip to content

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

  • by Authour

கோவை மாவட்டம் , சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர் . இந்நிலையில் நடுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு தாய் தங்கமணியுடன் பிரதீப் குமார் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது காமாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது பின்புறமாக சுல்தான்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உள்ளூர் அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய பிரதீப் குமார் இருசக்கர

வாகனத்தை கீழே போட்டுள்ளார். இதில் பின்புறமாக அமர்ந்திருந்த தாய் தங்கமணி பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் . அதிர்ஷ்டவசமாக பிரதீப் குமார் வலது புறமாக கீழே விழுந்ததால் காயங்களுடன் உயிர்த்தப்பினர். உடனடியாக சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காந்திபுரம் போக்குவரத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!