கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் சுப்பையா கவுண்டர் தோட்டத்தில் ராமசாமி, மயிலாத்தாள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர், ராமசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்,மயிலாத்தாள் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார்,இருவருக்கும் கடந்த சில மாதங்களாக குடிநீர் மற்றும் கழிப்பிட பிரச்சனை பயன்படுத்துவதில் இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு செய்து வந்துள்ளனர்,இதை அடுத்து ராமசாமிக்கும் மயிலாத்தால்
இருவருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ராமசாமி இளநீர் வெட்டும் அருவாளால் மயிலாத்தாவை வெட்டி விட்டு வீட்டிற்க்குல் ஓடி ஒளிந்துவிட்டார், காயம் அடைந்த மயிலாத்தாவை அப்பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,தகவல் அறிந்து வந்த கோமங்கலம் போலீசார் வீட்டின் மேல் கூரை சென்று பார்க்கும் பொழுது ராமசாமி தூக்குலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது, இச்சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.