Skip to content

கோவை இளம்பெண் கொலை, வாலிபர் போலீசில் சரண்

கோவை,சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து  வந்தார். இவரது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், தாயாரும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் ராஜேந்திரன் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
வீட்டின் அருகில்  உள்ள மாட்டு கொட்டகையை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கு  நாய்கள் வளர்ப்பதற்காக வாடகைக்கு கொடுத்திருந்தார்.

கடந்த 45 நாட்களாக தங்கியிருந்த ரம்யாவை பார்ப்பதற்காக அவ்வப்போது சிலர் ஆட்டோவில் வந்து செல்வது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாட்டு கொட்டகையை காலி செய்யுமாறு ரம்யாவிடம் ராஜேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூர் காவல் நிலையத்திலும் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல் ரம்யாவை பார்ப்பதற்காக சிலர் ஆட்டோவில் வந்துள்ளனர். அவர்களை உள்ளே வர வேண்டாம் என ராஜேந்திரன் தடுத்துள்ளார். இதனால் ரம்யாவுக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரம்யாவின் கழுத்துப்பகுதியில் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
பின்னர், கொலை செய்த அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!