கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (50), சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி (44). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு ஒன்றை பிடித்து வீடியோ பதிவு செய்தனர். அதில், உமா மகேஸ்வரி மனிதர்களிடம் இருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதர்களையும் காப்போம் எனவும், பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம். உங்கள் பகுதியில் பாம்புகள் இருந்தால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கவும் என கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக, அப்துல் ரகுமான், உமா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.