கேரள மாநிலம் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது டேங்கரில் இருந்த கேஸ் நிரப்பிய சிலிண்டர் தரையில் உருண்டு விழுந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து நடந்தது. அப்போது அங்கு மக்கள்ந டமாட்டம் இலலாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதில் 18 டன் கேஸ் இருந்தது.அது கசிந்தது. அதில் உள்ள கேஸ் முழுவதையும் வெளியேற்ற தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இதற்காக அந்த பாலத்தில் இருந்த திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவையில் நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் உள்ள10 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
கேஸ் டாங்கர் லாரி விபத்துக்குள்ளான இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எந்த அசம்பாவிதமும் நடக்கமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வாயுக் கசிவை நிறுத்தியுள்ளோம்.