கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகத்தை வனவிலங்குளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்..மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது..இங்கு வாழை, தென்னை, கரும்பு, பாக்கு விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வரும் நிலையில் இப்பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் யானை, காட்டுப்பன்றி, மான் போன்ற வன உயிரினங்கள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது அன்றாட நிகழ்வாகி வருகிறது..இதனால் பெரும் இழப்பிற்கு ஆளாகி வரும் விவசாயிகள் வனத்தை விட்டு வனவிலங்குள் வெளியேறுவதை வனத்துறையினர் தடுக்க தவறி விட்டதோடு யானைகள் தோட்டங்களுக்குள் நுழையும் போது வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால் அவற்றை விரட்ட நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத்தன போக்காக நடந்து கொள்வதாக புகார் தெரிவக்கின்றனர்.
இந்நிலையில், இன்று யானை மற்றும் காட்டு பன்றிகளால் செதமான தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களுடன் தழிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காரமடை வனச்சரக அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்..வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து போராட்டம் கைவிடப்படாது என தெரிவித்து காரமடை-தோலம்பாளையம் சாலையில் உள்ள வனச்சரக அலுவலகத்தை சூழ்ந்த நின்ற விவசாயிகளால் இவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது..இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை காவல்துறை ஆய்வாளர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்..இனி வரும் காலங்களில் விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்..விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது..