கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டை தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது. இந்நிலையில் யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்கான பணிகளில் வந்து ஈடுபட்டு வருகின்றனர். தேவைப்படும் பச்சத்தில் யானைக்கு மயக்க
ஊசி செலுத்த வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமாரன் தயார் நிலையில் வனத்துறை குழு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.