கோவை, பொள்ளாச்சி அருகே சேத்துமடை மணக்கடவு அம்மன் கோவில் பகுதியில் வழக்கமான ரோந்துவில் பணிக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அருகில் சென்று பார்த்த போது ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆனைமலை போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தவர் டாப்சிலிப் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள முத்து யானையின் பாகன் ராஜ்குமார் ( 35) என்ப தும், அவர் சேத்துமடை
அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சேத்துமடையில் இருந்து
கோழிகமுத்தி முகாமை சேர்ந்த சிலருடன் ஜீப்பில் டாப்சிலிப்பிற்கு ராஜ்குமார் சென்றதாக கூறப்படுகிறது. சோதனை சாவடி தாண்டி சென்ற போது திடீரென்று ராஜ்குமார் ஜீப்பில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாகவும், இதனால் அவரை அங்கேயே இறக்கி விட்டு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக ராஜ்குமாரின் உடலை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத. பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் இறந்ததற்கான முழுவிவரமும் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யானை பாகன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் இவரது உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர் . இதனால் போலீசார் இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.