தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர்
தொட்டி ஏற்பாடு செய்து தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்தின. இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.