Skip to content

அம்பேத்கர தொட்ட, நீ கெட்ட: கோவையில் திமுக போஸ்டர்…

  • by Authour

நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகைிில் கருத்துக்களை தெரிவித்ததாக  இந்தியா கூட்டணி கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமித்ஷாவை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நேற்று நாடாளுமன்றத்திலும் இந்த போராட்டம்  விஸ்வரூபம் எடுத்தது. இது தரப்பு எம்.பிக்களும் மோதலில் ஈடுபட்டனர்.நேற்று தமிழ்நாட்டில் திமுக, விசிகவினர்  அமித்ஷாவை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.  பல இடங்களில் அவரது உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்த நிலையில் கோவை திமுகவினர் அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் பிரமாண்ட சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

திமுக இளைஞரணி சார்பில் “அம்பேத்கர தொட்ட… நீ… கெட்ட…” என்ற வாசகத்துடன் உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம்  உள்பட கோவை மாநகர் முழுவதும்  இந்த  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.  இந்த சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

error: Content is protected !!