கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.இதில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது மேடையில் பேசிய அவர்,
2023ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்துள்ளேன் என்கிறார் பிரதமர் மோடி,53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என தெரிவித்தார்.50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது தமிழகம்,
தற்போது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன் சட்டரீதியாக எதிர்கொள்வேன்,அமலாக்கத்துறை சோதனை சாதாரணமாக நடப்பது தான் என்றார். கோவையில் நேற்று அமலாக்கத்துறை ஆ ராசாவிற்கு சொந்தமான இடத்தில் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.