கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஜமீன் கோட்டாம்பட்டி இறந்த ரஞ்சித்குமார் தாய்மாமனின் மகன் ஆவார். இறந்து போன ரஞ்சித் குமாருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவி வேறொருவருடன் திருமணம் முடித்து சென்று விட்டார். ரஞ்சித் குமாரின் பெற்றோர்கள் இறந்துவிடடனர். ரஞ்சித் குமார் கூலி விலை செய்து தனியாக மாகாளியம்மன் கோவில் வீதியில் வசித்து வருகிறார்.
கோபாலகிருஷ்ணன் திருமணம் ஆகவில்லை டிரைவராக வேலை செய்து கொண்டு ஜமீன் கோட்டாம் பட்டி- ஆத்து மேடு பகுதியில் தனியாக வசித்து வருகிறார், இறந்து போன ரஞ்சித் குமாரும்,கோபாலகிருஷ்ணன் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று இரவு ரஞ்சித்குமார் மது வாங்கி கொண்டு கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இறந்து போன ரஞ்சித் குமாரின் அம்மாவை கோபாலகிருஷ்ணன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர். கோபாலகிருஷ்னன் வெளியில் வீட்டு மதில் சுவரில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் அடித்ததில் இதில் ரஞ்சித் குமார் விழுந்ததும் அதே கல்லை எடுத்து முகத்தில் தாக்கியுள்ளார். இதில் ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
கோபாலகிருஷ்ணன் அருகில் வசிக்கும் உத்தரராஜ் தொலைபேசி மூலம் கோட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவித்ததன் பெயரில் போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் வந்து பார்த்தபோது ரஞ்சித் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் காவல் ஆய்வாளர் விசாரணை செய்தும் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்,தாய்மாமன் மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.