34 ஆண்டுகள் கோவை தினகரனில் போட்டோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற சாதிக்கிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கோவை மாவட்ட போட்டோ கிராபர்கள் கலந்து கொண்டு சாதிக்கிற்கு மலர் மாலை அணிவித்தினர். பின்னர் தங்களது, கேமராக்களை உயர்த்தி அவரை கௌரவித்தனர். விழாவில் கலந்து கொண்ட பிற புகைப்பட கலைஞர்கள், சாதிக்கின் பத்திரிக்கை பணி குறித்து பாராட்டுகளைத் தெரிவித்தனர். அவரது புகைப்படங்கள், கோவை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளை உலகிற்கு கொண்டு சென்றதாகவும், அவரது பணி இளம் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறினர். இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய சாதிக், தனது 34 ஆண்டுகால பணி குறித்து நினைவு கூறி, தனக்கு கிடைத்த பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதோடு இளம் புகைப்படக் கலைஞர்கள் தங்கள் கலையை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், புகைப்படக் கலை துறையில் மேலும் மேலும் புதியவர்கள் வருவதைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.