கோவை திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவரான வே.கதிர்வேல் அவர் சார்பில் கோவையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில்…. சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 30 லட்சம் சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. விநியோகம் செய்யப்படும் போது ரூ.30 குறைந்தபட்சமாக பில் தொகையை விட
கூடுதலாக பெறப்படுகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.9 கோடி ஊழல் ஒன்றிய அரசு செய்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையில் மோடி அரசு ஆண்டுக்கு ரூ.3200 கோடி ஊழல் செய்கிறது. ED-அமலாக்கத்துறை கண்ணில் படும்வரை சேர் செய்யவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சிலிண்டர் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.