Skip to content
Home » கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

கோவை கோர்ட்டில் கையில் கத்தியுடன் ரகளை செய்த நபரால் பரபரப்பு…

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் விதிக்கப்பட்ட நிலையில், இன்று மனைவியுடன் நீதிமன்றம் வந்தார். நீதிமன்றத்தில் இவரை கைது செய்ய போலீசார் இருந்ததால், ஆவேசமடைந்த பஷீர் சிறைக்கு போகமாட்டேன் என கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் மனைவி பிரியாவின் கைப்பையில் இருந்த சிறிய கத்தியை தூக்கிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல் துறையினர் அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து செல்வபுரம் போலீஸ் ஸ்டேசனில் அழைத்து சென்று விசாரணை  செய்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் பஷீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!