கோவை, தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35) பழைய கார்களை வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர் . அப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காவிலேயே இருந்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸ் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . அவர்கள் வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் தொங்கிவாரு கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டனர். தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடி கொடுத்ததாலும் காதல் திருமணம் செய்து குழந்தைகள் இல்லாத நிலையில் உறவினர்கள் யாரும் இவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்த விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
