ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் முழு உடல் பரிசோதனை முகாம் ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.இந்த மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு ஸ்கேன், எக்ஸ்-ரே, ECG இருதய பரிசோதனை கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை புற்றுநோய்கள், இரத்தசிவப்பு
அணுக்கள், வெள்ளை அணுக்கள் சர்க்கரை அளவு, மஞ்சள் காமாலை, உப்பு சத்து அளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும் கல்லீரல், கணையம், ஜீரண மண்டல நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது.மேலும் தொடர்ந்து சுமார் 750 நபர்களுக்கு வரும் நாட்களில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுமென மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமின் துவக்க நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு அவர்கள், துணைத்தலைவர் டாக்டர். பிரவீன் ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் சிவக்குமார், சுகாதார குழு மாரி செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.