கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் 4″சதவீதமாக உயர்ந்து உள்ள நிலையில் சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 100 கடந்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் இருந்து வந்தது.
இதனால் தீவிர காய்ச்சல் பாதிப்பு கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்கள் ஆக மாநிலம் முழுவதும் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது. இதை அடுத்து காய்ச்சல் பரிசோதனை அதிகரிக்க மாநில அரசு சார்பில் சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டது.
நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைத்து ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்தி பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கோவையில் 40 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 100 மருத்துவ முகாம்கள் வரை நடத்தப்படுகிறது.
இதன் மூலம் கொரோனோ பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 கடந்து உள்ளது.
கடந்த மார்ச் 15 ஆம் தேதி 1 சதவீதமாக இருந்த கொரோனா நோய் தொற்று பரவல் தற்பொழுது 4 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
மேலும் கொரனோ நோய் தொற்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் மட்டும் 100 ஐ கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.