கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் பிசியோதெரபி கல்லூரி சார்பாக கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் செயல் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ராம செட்டிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் பி ஆர் ஜே ஆர்த்தோ மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச எலும்பு மூட்டு மற்றும் இயன்முறை சிகிச்சை முகாம் நடைபெற்றது. சேரன் சுகாதார அறிவியல் கல்லூரியில் டீன் டாக்டர் செல்வராணி ,பி ஆர் ஜே மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கல்லூரியின் முதல்வர் கார்த்திக் முன்னிலை வகித்தார்., முகாமில், எலும்பு முறிவு முதுகு வலி இடுப்பு வலி கழுத்து மற்றும் மூட்டு வலி டிஸ்க்
பிரச்சனை தசை பிடிப்பு விளையாட்டு காயங்கள் உள்ளிட்ட பல்வேறு எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது..இதில் ராமசெட்டிபாளையம்,கோவைபுதூர், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர். முகமிற்கான ஏற்பாடுகளை நியூரோ துணைத் தலைவர் ஞானேஷ்குமார், விளையாட்டு தொடர்பான பிசியோதெரபிஸ்ட் பேராசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் பி ஆர் ஜே மருத்துவமனையின் மருத்துவர் அதிபதி ஆகியோர் ஒருங்கிணைப்பில் முகாம் நடைபெற்றது.