கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட முன்னோடி வங்கிகள் கடன் உதவிகளை வழங்குவதற்கு பங்கேற்றுள்ளனர். இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்காக
தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வந்து விண்ணப்பித்தனர். இந்த முகாமினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் உரையாடினார். பின்னர் இம்முகாமினை பார்வையிட்டார். IOB, HDFC, TMB, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆந்ப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் கடன் உதவிகளை வழங்குகின்றன.இதில் 350 கோடி வரை கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.