இந்தியாவில் தொடர்ச்சியாக கோவிட் பாதிப்பு அதிகரிக்கிறது. பிப்ரவரியில் தினசரி பாதிப்பு 80 முதல் 100 என்ற அளவில் இருந்தது. தற்போது 6000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடாகா, மகாராஷ்டிரா, அரியானா, டில்லி, இமாச்சல் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகம். வாரந்தோறும் 2 முதல் 3 மடங்கு உயர்கிறது. உருமாறிய வைரஸ் தான் காரணம் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். கோவிட் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதரத்துறை பல அறிவுரைகளை வழங்கியது. நாடு முழுவதும் 2 நாட்கள்
கோவிட் தடுப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் நடந்த ஒத்திகையை கலெக்டர் கிராந்தி குமார்பாடி பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் கூறுகையில்… கோவிட் பாதிப்பை சமாளிக்கும் வகையில் போதிய அளவு படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் இருப்பதை உறுதி செய்வதும் டாக்டர், நர்ஸ், ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இதன் நோக்கம் என மத்திய அரசு கூறியது. இவை கோவை அரசு் மற்றும் இ எஸ் ஐ மருத்துவ மனைகள் முன்னேற்பாடுகள் சரியக உள்ளது என தெரிவித்தார்.