கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மேலே தண்ணீரை
ஊற்றி முருகேசன் மற்றும் அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் முருகேசன் கூறுகையில்…
கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் கணக்காளராக பணிபுரிந்து வருவதாகவும் தான் இருக்கும்போது இன்னொரு நபரை செயல் அலுவலர் கனகராஜ் பணிக்கு அமர்த்தி விட்டார்.
இதனால் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் செயல் அலுவலர் கனகராஜ் தனது பணியை பிடுங்கிவிட்டார் எனவும் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக தெரிவித்தார்.