ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர்
பல்வேறு அமைப்பினர் கையெழுத்திட்டனர். எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் முகத்தில் எய்ட்ஸ் பொம்மை ஓவியத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி,பள்ளி மாணவர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் எய்ட்ஸ் நோய் குறித்து ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது.