Skip to content
Home » கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

  • by Senthil

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கல்  குறித்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொடிசியா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கும் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கும் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கும் காப்புரிமை மாநில அனுமதி திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கும் என மொத்தம் 46 நபர்களுக்கு 6.54 கோடி மானியம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ அன்பரசன்கூறியதாவது:

30 ஆயிரத்து 324 தொழில் முனைவோர்களை கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அரசு உருவாக்கி, 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை தமிழக முழுவதும் 16 தொழிற்பேட்டைகள், 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது, புதிதாக 115.6 கோடி மதிப்பில் பத்து தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருசிறது. தமிழக முழுவதும் சமச்சீரான தொழிற் வளர்ச்சி ஏற்படுத்தி, அதிக தொழில் வளர்ச்சியை உருவாக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு.கடந்த அதிமுக ஆட்சியாளர்கள், மத்திய அரசின் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான், மின் கட்டணம் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டதற்கு காரணம் .

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறுகுறு தொழில் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!