Skip to content
Home » முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தடைந்தார்.   கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 10,000 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியை தமிழக மின்துறை , மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியல்  தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது…

அதிமுகவில் இருந்த போது செல்வராஜ் விவாத மேடைகளில் பேசுவதை பார்த்துள்ளேன். அப்போது திமுகவை, திட்டி சிலர் பேசும்போது கோபம் மற்றும் ஆத்திரம் வரும். செல்வராஜ் வெளிப்படையாக பேசுபவர் என்பதால் அவரை தனக்கு மிகவும் பிடிக்கும். நம்மை திட்ட திட்டத்தான் வைரமாக நாம் ஜொலித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

அடுத்த முதல்வர் நான்தான் எனக்கூறி திடீரென்று கட்சி தொடங்கியவர்கள் இன்று அனாதையாக உள்ளனர். தேர்தலில் போட்டியிட அல்ல, மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. திமுகவை ஆட்சிக்காக அல்ல, தொழிலாளர்களுக்காக, தமிழ் சமூகத்துக்காக, இனத்துக்காக அண்ணா தோற்றுவித்தார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டுவந்தார்; தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி அண்ணா நிறைவேற்றி தந்தார். ஓராண்டு காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அளவுக்கு தீர்மானங்களைக் கொண்டு வந்தார் அண்ணா; இருமொழி கொள்கை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது உட்பட முக்கிய 3 தீர்மானங்களை அண்ணா நிறைவேற்றினார்.

இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சி எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு திமுக உடந்தை என அபாண்ட பழியை சுமத்தி 1991இல் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்று மதம் சாதியின் மூலம் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சி அகற்ற பார்க்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய இன்றே களமிறங்குங்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன் பணியை தொடங்குங்கள். சென்ற முறை 39 தொகுதிகளில் வென்றோம் இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவினாசி ரோட்டில் உள்ள லீமெரிடியன் ஓட்டலுக்கு சென்று அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். அதன்பிறகு மாலை 5 மணிக்கு லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து கார் மூலமாக கருமத்தம்பட்டிக்கு செல்கிறார். கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விசைத்தறி, கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் சென்று அங்கு இருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!