கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 25ம் தேதி காந்திபுரம் பகுதியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஜானகி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்க செயினை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள்
வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் காலை 7 மணி அளவில் வந்த மர்மநபர்கள் , கண்ணிமைக்கும் நேரத்தில் ஜானகியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதில் நிலை தடுமாறி கீழே குப்புற விழுந்த ஜானகி பின்னர் எழுந்து சுதாரிப்பதற்குள் அவர்கள் மர்மநபர்கள் தப்பி செல்கின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாநகர காவல் ஆணையர் ரயிலில் வெளியூரிலிருந்து வந்த கும்பலஆணையர் பாலகிருஷ்ணன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் , ரயில் மூலம் வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், அவர்களை நெருங்கி விட்டதாகவும் , விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.