சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சொரியம் பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரிகா கேவட் என்பவரது மகன் பின்டு கேவட் (25) என்பவரிடமிருந்து இரண்டு கிலோ எடையுள்ள 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.