கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் இவரது மகன் ஜெபாடானியல் (28). இவர் கோவை விளாங்குறிச்சி சாலை சேரன்மாநகர் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வளர்ப்பு மீன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஜெபாடேனியல் வழக்கம் போல தனியார் வணிகவளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, முதல் தளத்தில் உள்ள தன்னுடைய கடைக்குச் சென்று உள்ளார். இரவு முழுவதும் அங்கிருந்த ஜெபடானியல் மறுநாள் மதியம் கீழே வந்து பார்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் முதல் கட்டமாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் வந்த மூன்று இளைஞர்கள், ஜெப டானி இரு சக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்நிலையில் இரு சக்கர வாகனங்களை திருடும் இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.