கோவையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த பாஜக பிரமுகரான அரசுப் பேருந்து ஓட்டுநரிடமிருந்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் தமிழ்நாடு முழுவதும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து கோவையில் தங்கி இருக்கும் நபர்களை வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனை கண்காணிக்கும் வகையில் தங்கும் விடுதிகளுக்கு போலீஸார் சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.