வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்றுகோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் இந்துத்துவ அமைப்புகள், மடாதிபதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் ஹெச். ராஜா உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியும் படுகொலை செய்யப்படும் சம்பவத்தை கண்டித்தும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள், வங்கதேச இந்து உரிமை மீட்பு போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது இதனால் போராட்டக்காரர்கள், மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது பாஜக மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட இந்து அமைப்பினரை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது அப்போது அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது .