கோவையில் இன்று தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை பொறுப்பு அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் கோவை தெப்பக்குள மண்டல பாஜக இளைஞர் அணி தலைவர் என்.விஷ்ணு மற்றும் இளைஞர் அணி மண்டல செயலாளர் என்.நிதிஷ் அவர்களின் ஏற்பாட்டில், பாஜக கிளைத் தலைவர் பி.ஆண்டவர், மண்டல செயற்குழு உறுப்பினர்கள் ஆகாஷ், திரு. ஸ்ரீ சக்தி, வார்டு பொறுப்பாளர் கிஷோர், மண்டல செயற்குழு உறுப்பினர் நிவேதா ஆகியோருடன், 40க்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.