தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
கோவையில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வேட்புமனு தாக்கல்ெ சய்தார்.கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டருமான கிராந்திகுமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் வானதி சீனிவாசன், வி.பி. துரைசாமி மற்றும் பா.ஜ.க. , கூட்டணி கட்சி முக்கிய தலைவர்களும் தொண்டர்களும