மார்கழி மாத அம்மாவாசை அன்று அனுமன் பிறந்ததால் அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் வாசனை திரவியம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும், ஆயிரம் குடம் பால் கொண்டு பிரம்மாண்ட அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக உலக நன்மை வேண்டி நாம சங்கீர்த்தனத்துடன் யாகம் நடத்தப்பட்டது. அதிகாலை முதலில் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.
