கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதால் இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியேறிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை மூலம் மாசாணி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கட்டிடத்தை மருத்துவ மையமாக மாற்ற 15 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை 11 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து
வைத்தார். இந்த நிகழ்வில் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி மாசாணி அம்மன் கோவில் அறங்காவல குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருமுருகன், மஞ்சுளா, தங்கமணி மருதமுத்து,ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், ஆனைமலை திமுக நகரச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் மற்றும் மருத்துவர்கள் மருத்துவத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.