சோசியல் டெமாகரடிக் டிரேடு யூனியன் SDTU கோவை மண்டலம் சார்பாக உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் நடைபெற்றது..
மண்டல தலைவர் முஹமதுஅலி தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக கோவை கரும்புகடையில் இருந்து உக்கடம் வரை
மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாநில பொருளாளர் அசன்பாபு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், SDTU தொழிற்சங்க தேசிய தலைவர் அஜீஸ் அப்துல்லாகான், தேசிய துணைதலைவர் இரா..செவ்விளம்பரிதி தேசிய செயற்குழு உறுப்பினர் ஜலீல்[கரமனா,], மாநிலதலைவர் முகமதுஆசாத் SDPI கட்சியின் மாநிலதலைவர். நெல்லைமுபாரக் அண்ணாதிராவிட முன்னெற்றகழக சட்டமன்ற கொறடா முன்னால் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர், வேலுமணி
அம்மன் அர்சுனன், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ரவூப்நிஸ்தார், மாநிலதுணைதலைவர் சாந்து இப்ராஹிம் SDPIகட்சியின் மாநிலசெயலாளர் ராஜாஉசேன். கோவை மத்திய மாவட்டதலைவர் முஸ்தபா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..