கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள் அம்பராம்பாளையம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் தண்ணீரில் தத்தளிப்பதை கண்ட மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கார்த்திகேயன் அதற்குள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கார்த்திகேயனை தேடி உள்ளனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கார்த்திகேயனின் கிடைக்காததாலும், இரவு நேரம் ஆனதாலும் தற்காலிகமாக தீயணைப்பு துறையினர் கார்த்திகேயனை தேடும் பணியை நிறுத்தி வைத்தனர். மீண்டும் இன்று காலை தொடர்ந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்திய போது கார்த்திகேயன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.