கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 11 பயணிகள் தங்கள் ஜீன்ஸ் பாண்ட், உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கத்தை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து 3.8 கோடி மதிப்பிலான 6.62 கிலோ தங்கத்தை சங்கிலியாகவும், கட்டிகளாகவும் பறிமுதல் செய்தனர். அதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் கைது செய்யப்பட்டார். தங்கத்தை கடத்தி வந்த ஒவ்வொருவரிடமும் இருந்து அரை கிலோ தங்கம் வரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ச சட்டப்படு ரூபாய் 50 லட்சம் மற்றும் அதற்கும் மேல் தங்கம் கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தில் ஒருவரை தவிர மற்ற 10 பேரும் ரூபாய் 50 லட்சத்திற்கும் குறைவான மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர்களிடமிருந்து கடத்தல் தங்கம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…
- by Authour
