கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…
மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்ட BNS, BNSS, BSA ஆகிய மூன்று இந்திய தண்டனை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் மனித சங்கிலி போராட்டமானது அறிவிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்ற வளாகம் முன்பு மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் மூன்று சட்டத்தினையும் ரத்து செய்து வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த சட்டங்கள் மனிதர்களுக்கு எதிரான சட்டங்கள் எனவும் காவல்துறைக்கு சாதகமான சட்டங்கள் எனவும் தெரிவித்த வழக்கறிஞர்கள் உடனடியாக மத்திய அரசு இதனை வாபஸ் பெற வேண்டும் எனவும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அடுத்த மாதம் 30 ம் தேதி ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.