கோவையில் அ.தி.மு.க.உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக உக்கடம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இதில், மனித உரிமை துறையின் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, இந்நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க தலைவர்
கோவை செல்வன்,மாநில இளைஞர் காங்கிரஸ் ஊடக துறை பொறுப்பாளர் ஹரிஹரசுதன்,வர்த்தக கமிட்டி மாவட்ட தலைவர் ஜோதி முத்துக்குமார்,மாநகர அமைப்பாளர் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில்,புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் எம்.என்.கந்தசாமி,மத்திய அரசின் மக்கள் விரோத போக்கில் சிறுபான்மை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்,வட மாநிலங்களில் சிறுபான்மை துறையினர் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். காஷ்மீர் லடாக்கில் நடைபெற்ற கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை சுட்டி காட்டிய அவர்,. வரும் நாடாளுமன்ற தேர்தலி்ல் இந்தியா கூட்டணி இதே போல மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.