கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் கோவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் லட்சுமிபுரம் பவளக்கொடி அணியின் சார்பில் கும்மியாட்டத்தில் ஆடி அசத்தினர்.இந்த கும்மி ஆட்டத்திற்கு பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை கௌமார மடாலயம் சார்பில் ஆதிணங்கள் முன்னிலையில் நநடைபெற்றது.இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தற்பொழுது பயின்று வருவதாகவும் மேலும் பல்வேறு துறையில் பணிபுரி பெண்களுக்கு கும்மியாட்டம் பயிற்சி அளித்து வருகிறார்கள் கூறினார்.மேலும்
தமிழ்நாடு முழுவதும் இந்த கும்மியாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடக்க இருப்பதாக கூறினார். வள்ளி கும்மி ஆட்டத்தில் பெண்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு ஆடி வருவதாகவும் பாரம்பரிய கலையான கும்மியாட்டம் தற்பொழுது அளிந்து கொள்வதாக கூறினார். அதனை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரியத்தை மறக்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே உண்மையாட்டம் நிகழ்ச்சி நடத்தி வருவதாக கூறினார்.